எமது நோக்கம்
சகோதரத்துவத்தினூடான அபிவிருத்தி
எமது குறிக்கோல்
ஒரு நபரின் பிறப்பிலிருந்து மரணம் வரையிலான சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் எமது குறிக்கோலாகும்
ஹாலிஎல பிரதேச செயலகம் பதுளை நகரத்திலிருந்து 06 கி.மீ தூரத்தில் அமைநதுள்ளது. பதுளைக்கு வடக்காக சொரணாதொடை, கந்தகெடிய பிரதேசங்களும் கிழக்கே பசறை மற்றும் எல்ல பிரதேசங்களும் மேற்கே ஊவபரணகம மற்றும் வெலிமட பிரதேச செயலகங்களும் அமைந்துள்ளன. ,இந்த பிரதேசம் 167 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளதுடன் 57 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும், 25958 குடும்பங்கள் மற்றும் 102305 சனத்தொகையையும் கொண்டுள்ளதாக அமையப்பெற்றுள்ளது.
இப்பிரதேசத்தின் பௌதீக வளங்களை நோக்கும் போது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை அமைக்கும் போது அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுகுமான பிரவேச பாதைகளும் மிக பாதிப்படைந்த நிலையிலே காணப்படுகின்றன. இந்த பிரதேசத்தில் சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் வேறு இன மக்களும் வசிக்கின்றனர். இவர்களுள் 9959 நபர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்திருந்தாலும் அவை பிரதேச மக்களின் தேவைகளிக்கு பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன. இவ்வாரான நிறுவனங்கள் பதுளை நகரத்தில் இருப்பதால் சுகாதார கல்வி தேவைகளை பூர்தி செய்து கொள்வதற்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது.
தேயிலை, மறக்கறி, பெரும்போக பயிர்ச்செய்கை, கலப்பு வீட்டு பயிர் தோட்டங்கள், நெல் வயல்கள் மற்றும் ஏற்றுமதி பயிர்களான கருவா , மிளகு போன்ற பயிர்களை காணக்கூடியதாக உள்ளது. இங்குள்ள பயிர் நிலங்களில் 68 % தேயிலையும், 14% நெல் வயல்களும், 8% போக பயிர்செய்கையும், 8% பிரதான பயிர்செய்கையும் மற்றும் தென்னை பயிர்ச்செய்கைக்காக 2% நிலங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
பிரதேசம் பற்றிய அடிப்படை தகவல்கள்
















